நீண்ட காலமாக தமது சொந்த நிலங்களுக்காக போராடி வரும் சம்பூர் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அங்கு அமைந்துள்ள கடற்படை அதிகாரிகளின் பயிற்சி நிலையம் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மக்களின் நிலம் அவர்களுக்கே வழங்கப்படவுள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இன்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்
கடற்படை அதிகாரிகளின் பயிற்சி நிலையமாக அமைந்துள்ள 237 ஏக்கர் காணிப்பரப்பே உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. மக்களின் பாதுகாப்புக்காக 2007 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட பயிற்சி நிலையமே தற்போதும் அங்கு பேணப்பட்டு வந்துள்ளது.
இடமாற்ற பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பினும் இது முடிவடைய குறைந்தது சுமார் 06 மாத காலம் எடுக்கலாம். அதன் பின்னர் காணிகளுக்கு உரிமையுடையவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க அரசினால் வசதிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments