Sri lanka news

Advertisement

  • Breaking News

    இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்சுக்கு சிங்கப்பூரில் தடை

    இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து விற்கப்படும் மேகி நூடுல்சுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயம் என்ற வேதிப்பொருள் அதிக அளவில் இருப்பதாக மேகி நூடுல்ஸ்க்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சிங்கப்பூர் இறக்குமதியாளர்களுக்கு அந்நாட்டு உணவு கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதேபோல, ஐரோப்பிய நாடுகளில் மேகியின் தரத்தை பரிசோதனை செய்யுமாறு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் சோதனையில் தெரிய வந்ததைப் போல, மேகியில் காரீயத்தின் அளவு அதிகமாக இருக்கிறதா என பரிசோதிக்க ஐரோப்பிய உணவு தர ஏஜென்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    Fashion

    Beauty

    Culture