Sri lanka news

Advertisement

  • Breaking News

    யாழில் மதுபான போத்தல்கள் மீட்பு!

    அனுமதிப்பத்திரமின்றி விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் யாழ் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. இவை  யாழ் நவாலி வடிசாலை நிறுவனத்திலிருந்து யாழ் நகர் ஊடாக மானிப்பாய் நோக்கி கொண்டு செல்லப்பட்ட போதே மீட்கப்பட்டுள்ளது.
    மேற்படி மதுபான போத்தல்கள் யாழ் நவாலியில் இயங்கிவரும்  வடிசாலைக்கு சொந்தமானதென்றும் இவற்றை வெளியில் கொண்டு செல்வதற்கென மதுவரி திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்து விட்டதென்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

    எனவே சட்டவிரோத முறையில் மதுபான போத்தல்கள் வைத்திருந்ததன் அடிப்டையில் மேற்படி 500 போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் குறித்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கொன்று யாழ் நீதிமன்றில் பதியப்படவுள்ளதாகவும் யாழ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

    Fashion

    Beauty

    Culture