கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி ஒன்றும் ஜுப் வண்டி ஒன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் 12 மாணவிகளும் 4 மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments