மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் இன்று நண்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Comments