பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 521 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவற்றில் 23 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் 'கபே' அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் அரச ஊழியர்களைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தியமை, சட்ட விரோத தேர்தல் பிரசாரங்கள், நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கல் உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 498 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Comments