Sri lanka news

Advertisement

  • Breaking News

    75 சயனைட் குப்பிகள் மற்றும் 300 கிராம் சயனைட்டுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது

    சுமார் 75 சயனைட் குப்பிகள் மற்றும் 300 கிராம் சயனைட்டுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கருதப்படும் ஒருவர் நேற்று  தமிழக - உச்சிபுளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவரிடம் இருந்து பாதை வழிகாட்டலுக்கு உதவும் நான்கு ஜீ பி எஸ் கருவிகள், 7 கையடக்க தொலை பேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

    இவ்வாறு சயனைட் குப்பிகளுடன் தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையானது, அந்த இயக்கம் மீண்டும் செயற்படுவதற்கான அறிகுறி காணப்படுவதாக ஹிந்து சந்தேகம் வெளியிட்டுள்ளது.

    39 வயது மதிக்கத்தக்க கே. கிருஸ்ணகுமார் எனப்படும் குறித்த நபர் 1990ஆம் ஆண்டுகளில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

    பின்னர் 2009ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அவர் இடம்பெயர்ந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    இவரிடம் இருந்து இலங்கை மற்றும் இந்திய நாணய தாள்களும், இரு நாடுகளிலும் பயன்படுத்தக் கூடிய வௌ;வேறு சாரதி அனுமதி பத்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    குறித்த இலங்கை தமிழரை தமிழகம் உச்சிபுளிக்கு அழைத்து வந்த இரண்டு இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தின் அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த இவர், கடல் வழியாக யாழ்ப்பாணம் செல்ல ஆயத்தமான நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.

    Indian Police have arrested a former militant of the proscribed LTTE and seized 75 cyanide capsules, 300 gm of cyanide, four Global Positioning System sets and seven mobile phones at coastal Uchipulli, Tamil Nadu.

    Fashion

    Beauty

    Culture