Sri lanka news

Advertisement

  • Breaking News

    பனை அபிவிருத்திக் கண்காட்சி நாளை ஆரம்பம்

    வடமாகாண சபையால் ஜீலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.   இதை முன்னிட்டு பனை அபிவிருத்தி வாரத் தொடக்கமான நாளை புதன்கிழமையில் இருந்து இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   வடமாகாணக் கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சங்கமும் பங்கேற்கும் இக்கண்காட்சி நாளை  பிற்பகல் 3.30 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது.    தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை 8 மணிவரை நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் பனைசார் கைவினைப் பொருட்கள், பனைசார் பாரம்பரிய உணவுவகைகள், பனைசார் ஓளடதங்கள், பனைவள அபிவிருத்தி ஆய்வு முயற்சிகள், அலங்காரப் பனைத்தாவரங்கள் பதினைந்து காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.    பார்வையாளர்களைக் கவரும் வகையில் தினமும் மாலை நேரங்களில் எமது பாரம்பரியத்தை வெளிக்காட்டும் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட உள்ளன.அத்தோடு கண்காட்சி அரங்கில் பனை உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களில் இருந்து அதிஸ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட இருப்பதோடு மாணவர்களிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.   வடக்கு கிழக்கில் பனை அபிவிருத்தியில் பெரும் பங்காற்றிய அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களைக் கௌரவிக்கும் முகமாகவே,வடமாகாண பனை அபிவிருத்தி வாரம் அவரது நினைவு தினத்தைத் தொடக்கமாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    Fashion

    Beauty

    Culture