தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று (20) காலை 10.00 மணிக்கு தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கவுள்ளார்.
இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் நடைபெறும் இச்சந்திப்பின் போது வேட்பாளர்களுக்கான ஒழுக்க கோவையின் பிரதிகளை கட்சி செயலாளர்களிடம் வழங்கி அது குறித்து கலந்துரையாேடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சந்திப்பினைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவையினை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கும் தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுக்குமென்றும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் பிரசாரக் கூட்டங்களில் தடை செய்யப்பட வேண்டிய விடயங்கள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் பிரசார அலுவலகங்களை அமைத்தல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுதல் உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்கள் குறித்த கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments