கண்டியில் இருந்து பண்டாரவளை நோக்கி சென்ற கெப் ரக வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து இறம்பொடை பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பலியானதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று ஞாயிறு பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் பயணித்த 5 பேரில் ஒரு பெண்மணி ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். இவரது சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்த நால்வரும் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தோரில் ஒருவர் பெண் ஆவார்.
மேலதிக விசாரனைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments