அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் இட ம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷ அங்கு வந்திருந்த ஒருவரை தாக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரி யவருவதாவது:-
பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக் ஷ, அக்குரஸ்ஸ நகரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு பழைய பஸ்தரிப்பிடத்திலேயே பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தேர்தல் பிரசாரக்கூட்டம் மாலை 4 மணி க்கு ஆரம்பமானது. மஹிந்த ராஜபக் ஷ மாலை 5.30க்கு குறித்து இடத்துக்கு சென் றார். குண்டுகள் துளைக்காத பென்ஸ் காரில் சென்றிறங்கிய அவர், குழுமியிருந்த மக்களுக்கு இடையிலேயே மேடையை நோக்கி சென்றார்.
அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், தனது ஆர்வ மேலீட்டால், ராஜபக் ஷவின் கை யை பிடித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் ஏதோவொரு குழப்பத்தில் இருந்த மஹிந்த ராஜபக் ஷ தன் கையை பிடித்தவரை நோக்கி தாக்க முயற்சித்துள்ளார். அவ்வாறு மஹிந்த, ராஜபக் ஷ தாக்க முயற்சித்த போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்த பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த மூவரும் தாக்குதலை தடுத்துநிறுத்துவதற்காக மஹிந்த ராஜபக் ஷவை பின்னால் தள்ளிவிட்டனர். அப்போது அவர் விழப் பார்த்தார். எனினும், மஹிந்தவுக்கு பின்னால் இருந்த பாதுகாப்பு தரப்பினர் மஹிந்தவை பிடித்துவிட்டனர்.
அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அக்குரஸ்ஸ வேட்பாளர் மனோஜ் சிறிசேன, மஹிந்த ராஜபக் ஷவை மேடைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷ சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எதுவுமே கூறவில்லை.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்ட இடத்தை விட்டுச் செல் லும் போது, நபரொருவர் இடையூறு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்
குறித்த நபர் இரண்டு முறை மஹிந்தவின் கையை பிடித்தமையே இந்நிலைமை தோன்றுவதற்கு காரணம் என்றும் அவர் மதுபோதையில் இருந்துள்ளார் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மஹிந்த ராஜபக் ஷவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
மாத்தறை - அக்குரஸ்ஸ பிரதேசத்தில் பேரணி ஒன்றின் போது, முன்னாள் ஜனாதி பதி மக்களிடையே சென்றுகொண்டிருந்த வேளை, அவரைப் பிடித்து இழுத்த சம்பவத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் இலாபம் தேட முற்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தவறான விள க்கம் வழங்கப்படுவதால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறமுடியும். பேரணியில் பாரிய கூட்டம் கலந்து கொண்டது. மஹிந்த ராஜபக் ஷ வழமைபோல் மக் களுக்கு இடையில் செல்லும் வேளை, எதி ரில் வருபவர் எவ்வாறான நபர் என சரியாக அடையாளம் காண்பதில் பாதுகாப்புப் பிரிவினருக்கு சிரமம் ஏற்படுவதுண்டு.
சம்பவத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒரு வர் மஹிந்தவை நெருங்க முற்பட்டார். முடி வில் அவரது (மஹிந்த ராஜபக் ஷ) கையை இறுக்கிப் பிடித்திருந்தார்.
இதன்போது குறித்த நபர் போதையில் இருந்துள்ளார்.
Home
Unlabelled
கையைப் பிடித்த நபரை மஹிந்த தாக்க முயற்சித்தமையினால் பெரும் பரபரப்பு
Comments