மாணவர்களை தங்களின் தேர்தல் அரசியல் செயற்பாடுகளுக்கும்,பிரசார நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தாதீர்கள் என கிளிநொச்சி மாவட்ட கல்வி சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது தேர்தல் காலம் என்பதால் சிலர் மாணவர்களை தங்களின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனை உடனடியாக விடுத்து மாணவர்களின் வழமையான கல்விச் செயற்பாட்டுக்கு வழிவகுக்குமாறு மாவட்ட கல்விச் சமூகமும் பெற்றோரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த கால தேர்தல்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பரப்புரை செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றன. கிளிநொச்சியில் சில தனியார் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் அரசியல் வாதிகளாகவும் இருப்பதனால் அவர்கள் தங்கள் கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மாணவர்களை .தேர்தல் காலங்களில் முழுமையாக கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். இதனால் பல மாணவர்கள் பல பாதிப்புகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போதும் அவ்வாறு மாணவர்களை தங்களின் தேர்தல் கால அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கிளிநொச்சியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்கென அழைக்கப்பட்டு தங்களுக்கு தேர்தல் பரப்புரை செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்க்கபட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
பரீட்சைகள் நெருங்கி வரும் வேளையில் இவ்வாறு மாணர்களை தங்களின் அரசியலுக்காக பயன்படுத்துவது கண்டிக்கதக்க விடயம் என்பதோடு அதனை கைவிட்டு மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு வழி ஏற்படுத்துங்கள் . கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகமும்,பெற்றோர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Home
Unlabelled
மாணவர்களை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தாதீர்கள் கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் வேண்டுகோள்.
Comments