Sri lanka news

Advertisement

  • Breaking News

    யாழில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்!

    நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலின் போது எந்தவிதமான வன்முறைகள், முறைகேடுகள் நடைபெறுவதை தவித்துக் கொள்ளும் முகமாக யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக் குழுக்களுக்கும், உதவித் தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸாருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (22) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
    பிரதித் தேர்தல் ஆணையாளர் சமன் ரட்நாயக்க தலமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் யாழ்.தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன், யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

    மேலும் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் 15 அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், 6 சுயேட்சை குழுக்களின் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

    இக் கலந்துரையாடலில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பரப்புரைகளின் நிபந்தனைகள் தொடர்பான விளக்கம் தேர்தல் அலுவலகர்களினாலும், பொலிஸாரினாலம் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டத்திற்கு 10 தேர்தல் முகவர் நிலையங்கள் மட்டுமே அமைக்க முடியும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் அனைத்து தேர்தல் பரப்புரைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணையாளரினால் மீள வலியுறுத்தப்பட் அறிவுறுத்தல்களும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

    இதுமட்டுமல்லாமல் இதுவரை காலமும் எந்த தேல்தல் வன்முறைகளும் நடைபெறவில்லை, இனி வரும் காலங்களிலும் தேர்தல் வன்முறைகள் நடைபெறாமல் இருப்பதற்கு அரசியல் சட்சிகள், சுயேட்சை குழுக்கள் ஓத்தழைப்பு தர வேண்டும் என்றும் பொலிஸார் வேட்பாளர்களிடத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Fashion

    Beauty

    Culture