விடுதலைப் புலிகளினால் வீசப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் குண்டொன்று வெடிக்காத நிலையில், இலங்கை விமானப்படைத் தளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில்
இருந்து குறித்த குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட குண்டு, கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளினால் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த வெடிகுண்டு 50 கிலோ எடையுடையது எனவும் வடிகாண் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் சிலரே இவ் வெடிகுண்டைக் கண்டெடுத்துள்துடன், இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட குண்டு, விமான நிலையத்தின் விமானப்படை வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் தமது சிறிய ரக விமானங்களின் மூலம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தையும், கொழும்பு கொம்பனி வீதியில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர்.
இதன்போது, விடுதலைப் புலிகளின் இரு விமானங்களும் இலங்கைப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதன்போது விடுதலைப் புலிகள் வீசிய குண்டே வெடிக்காத நிலையில் கண்டெக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Home
Unlabelled
புலிகள் வீசிய குண்டு வெடிக்காத நிலையில் கட்டுநாயக்கவில் கண்டெடுப்பு!
Comments