ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சதோச கட்ட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மேலும் வெலிஓய விவசாயிகளுடன் இன்று காலை ஜனாதிபதி மாநாடு ஒன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் கணக்காய்வுத்துறை முக்கிய பங்கை வகித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிறந்த நிதி ஒழுக்கத்தையும் நிதி முகாமைத்துவத்தையும் பராமரிக்க கணக்காய்வாளர்கள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற சர்வதேச முகாமைத்துவ கணக்காய்வாளர் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.
Comments