Sri lanka news

Advertisement

  • Breaking News

    முல்லைத்தீவில் இரு இந்தியர்கள் கைது


    வீசா வரையறைகளை மீறி சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

    பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

    சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

    மேலும் இவர்கள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

    அத்துடன் சந்தேகநபர்களை மீண்டும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    Fashion

    Beauty

    Culture