
வத்தளை கந்தான பகுதியில் 500 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றில் போதைப் பொருளை கொண்டு சென்ற போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
ராகம இராத்மலானை மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளில் உள்ளவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments