தலவாக்கலை, ஹொலிரூட் தோட்டத்தில், பாடசாலை மாணவியை (17), 2001 ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதியன்று கடத்திச்சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையைச் சேர்ந்த நாலக்க பியல் சமரவீர மற்றும் துவான் ரொமேஸ் ஆகிய இருவருக்குமே இவ்வாறு 23 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்கவே மேற்கண்டவாறு நேற்று திங்கட்கிழமை தீர்ப்பளித்தார்.
Comments