நுவரெலியா, வெதமுல்லையில் லொறியில் மோதுண்டு பெண்ணொருவர் இன்று மாலை உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில், வெதமுல்லையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான வரதராஜ் வயது (36) சந்திரகலா என்பவரே உயிரழந்துள்ளார்.
இந்நிலையில் தோட்ட மக்கள் லொறியையும் லொறியின் சாரதியையும் அவ்விடத்திலிருந்து வெளியேற விடாது சூழ்ந்துகொண்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது. பெண்ணின் சடலம் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Comments