சொத்து விபரங்களை வெளியிடத் தவறியமை தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிற்கு அமைவாகவே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துமிந்த சில்வா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த 2011, 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தமது சொத்து விபரங்கள் தொடர்பில் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலேயே ஊழல் விசாரணை ஆணைக்குமு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகது கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments