கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவான் ஏ.எம்.எம் ரியாலினால் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments