Sri lanka news

Advertisement

  • Breaking News

    காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்

    சில உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கு காரணம், அந்த உணவுகளில் உள்ள ஆசிட்டுகளும், வயிற்றில் உள்ள படலத்தை பாதிக்கும் வகையிலான பொருள் இருப்பதும் தான் காரணம். முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது.

    உதாரணமாக, வாழைப்பழம், தயிர், தக்காளி போன்றவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது.

    நீங்கள் டயட்டில் இருந்து, வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுபவராயின், காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைப் பருகி பின் பழங்களை உட்கொள்ளுங்கள்.

    * சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

    * தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

    * எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் பல பிரச்சனைகளை உருவாக்கிவிடும்.

    * பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

    காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

    * டீ, காபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் டீ, காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

    * தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

    Fashion

    Beauty

    Culture