டொலரின் பெறுமதிக்கு ஏற்ப ரூபாவின் பெறுமதியை தக்கவைத்து கொள்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக எதிர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த காலங்களில் செயற்கையாக கட்டுப்படுத்தப்பட்ட ரூபாவின் பெறுமதியை சீர்செய்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றில் அதி கூடிய விலையாக டொலர் ஒன்றின் விலை இன்று பதிவாகியுள்ளது.
மத்திய வங்கியின் அறிவிப்பின் படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 145 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளது.
இந்த வருடத்தின் ஆரம்ப பகுதியில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 133 ரூபாவாக காணப்பட்டதுடன் அத்தொகையானது இன்று 8% இனால் அதிகரித்துள்ளது.
டொலரின் விலையை நிர்ணயிப்பதற்காக சந்தையில் மத்திய வங்கியின் டொலர் விநியோகம் இடை நிறுத்தப்பட்டமை இதற்கு பிரதான காரணமாகியது.
Comments