Sri lanka news

Advertisement

  • Breaking News

    குளத்தில் மூழ்கி 3 வயது குழந்தை பலி

    வீட்டுக்கு அருகில் இருந்த குளத்தில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை பலியாகியுள்ளது. நேற்று  (01) இடம்பெற்ற இச்சம்பவத்தில், தலாவ, கரகஹவேவ பிரதேசத்திலுள்ள குழந்தை ஒன்றே பலியாகியுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

     குறித்த குழந்தை, தனது வீட்டுக்கு அருகிலிருந்த குளத்திற்கு தனிமையில் சென்று, குளத்தில் மூழ்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    இவ்வாறு மூழ்கிய குழந்தை, ஆபத்தான நிலையில், தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    3 வருடங்கள் 06 மாதங்களான சதெவ் நிம்சரா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு, குழந்தையின் தேகம் மரண விசாரணைகளுக்காக தலாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
    தலாவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

    Fashion

    Beauty

    Culture