
இதன் முதல்கட்ட நடவடிக்கைகள் இந்த வருடத்தில் மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார்வாகன திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் 600 தனியார் பஸ் சாரதிகளுக்கு இதுவரை பயிற்சி வழங்கப்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சிகளின் பின்னர் சாரதிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக மோட்டார்வாகன திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
சாரதிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழின் பிரகாரம் இந்த வருடத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் போது அனுமதிப்பத்திரத்தில் பயணிகள் போக்குவரத்து என்ற நாமம் பொறிக்கப்படும் என ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட நாமத்தை பெற்றுக்கொள்ளாத சாரதிகளால் எதிர்வரும் காலங்களில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடமுடியாது என மோட்டார்வாகன திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
Comments